
சபரிமலையில் கனமழை: நனைந்தபடி தரிசனத்துக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் | Heavy Rain on Sabarimala: Ayyappa Devotees get Soaked as they go for Darshan
தேனி: சபரிமலை பகுதியில் பெய்து வரும் கனமழையினால் பக்தர்கள் நனைந்துகொண்டே ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் நிலை உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். இதன்படி இம்மாத வழிபாட்டுக்காக கடந்த 14-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் இரவு வரை […]