
கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் | Kumbabhishekam Celebration in Kandakottam Muthukumaraswamy Temple
சென்னை: கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ராஜகோபுரக் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது ‘அரோகரா’ கோஷத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை பூங்கா நகர் கந்தகோட்டத்தில் நூற்றாண்டு பழமையான முத்துக்குமாரசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில்வள்ளி, தேவசேனா உடனுறை முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டும் ஜூலை 15-ம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் […]