
அருஞ்செய்திகளின் தொகுப்பு | நூல் வெளி | madurai pathippu varalaru book review in tamil
பாரதியாரின் முதல் பாடல் (தனிமை இரக்கம்) மதுரையிலிருந்து வெளிவந்த ‘விவேக பானு’ இதழில்தான் வெளிவந்தது. வ.ரா.வின் முதல் மொழிபெயர்ப்பும் மதுரையிலிருந்து வெளிவந்த ‘ஞானபானு’வில்தான் வெளியானது. இப்படிப்பட்ட தகவல்கள் மதுரையிலிருந்து வெளியான இதழ்களின் இலக்கிய முக்கியத்துவத்தையும் எண்ணிக்கைப் பெருக்கத்தையும் காட்டுகின்றன. இதழ்கள் மட்டுமல்ல; புத்தகக்கடைகளும் மதுரையில் மிகுதியாக இயங்கியுள்ளன. காலையில் கறிக்கடையாகவும் மாலையில் புத்தகக் கடையாகவும் ஒரே கடை இரு வேடங்களைப் புனைந்துள்ளது. இதை நடத்தியதும் ஒருவரே. ‘ஸ்லாட்டர் ஹவுஸ் அண்ட் […]