
நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் கோலாகலம் | Nellaiappar Temple Anithiruvizha Chariot Parade Thousands of Devotees Participate
நெல்லை: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (செவ்வாய்ழ்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்கிறார்கள். இதனால் ரதவீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா சிறப்புமிக்கது. இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது. […]