menu Home
Spirituality

மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது: ‘அரோகரா’ கோஷத்துடன் மக்கள் திரண்டனர் | Muruga devotees summit being held in Madurai today

Bhakti Teacher | June 22, 2025


இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மடாதிபதிகள், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்தும் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தர உள்ளனர். திருப்பரங்குன்றம் மலைக் கோயில் வடிவத்தில் மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலையிலேயே பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர், ஆன்மிக அமைப்பினர் வாகனங்களில் மதுரைக்கு வரத் தொடங்கிவிட்டனர். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு: ஆளுநர் ஆர்​.என்​.ரவி நேற்று காலை மாநாட்டு வளாகத்​துக்கு வந்​தார். அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.பின்னர் அவர் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்​களில் தரிசனம் செய்​தார். மாநாட்டு திடலில் கூடி​யிருந்த பக்​தர்​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ஆளுநர் கூறிய​தாவது: தென்​னாடுடைய சிவனே போற்​றி, எந்​நாட்​ட​வருக்​கும் இறைவா போற்றி என்​கிறோம். அந்த சிவனின் குழந்தை முரு​கப் பெரு​மான். அவர் நமது கலாச்​சா​ரத்​தின், பண்​பாட்​டின் அடை​யாளம். நான் அறு​படை வீடு​களுக்​கும் நேரில் சென்று முரு​கப்​பெரு​மானை தரிசனம் செய்​துள்​ளேன். இங்கு அறு​படை வீடு​களை​யும் ஒரே இடத்​தில் தரிசனம் செய்​தது மகிழ்ச்சி அளிக்​கிறது. இந்த மாநாடு அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டது. இதை ஒருங்​கிணைத்த இந்து முன்​னணிக்கு வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.