menu Home
Hindu Literature

நூல் வரிசை | one line book review in tamil

Bhakti Teacher | June 10, 2025


உறங்கிப்போன உண்மைகள்

பாவலர் காரை மைந்தன்

விழுதுகள் வெளியீடு

விலை: ரூ.120

தொடர்புக்கு:9840034044

மரபுக் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் இவை. உறவுகள், அரசியல் எனப் பலவும் பொருள்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.

உங்களின் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பது எப்படி?

எச்.கார்த்தியன்

மாஸ்டர் மீடியா

விலை: ரூ.200

தொடர்புக்கு: 84281 28007

டிஜிட்டல் ஆவணங்கள் அதிகமாகப் புழங்கும் காலகட்டம் இது. நமது டிஜிட்டல் ஆவணங்களைச் சேகரிப்பது எப்படி என எளிமையாக விளக்கும் நூல் இது.

காட்டுத் தாத்தா

பூபதி பெரியசாமி

போதிவனம் வெளியீடு

விலை: ரூ.110

தொடர்புக்கு: 98404 50437

சிறார்களுக்கான கதைகள் என்கிற புரிதலில் எளிமையாக எழுதப்பட்ட கதைகள் இவை. மாடு, காகம் எல்லாம் உயர்திணை மொழிபேசுவது சுவாரசியமாக உள்ளது.

குருதிப்பாடு

ச.மோகன்

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

விலை: ரூ.180

தொடர்புக்கு: 6381357957

ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாடுகளைச் சித்தரிக்கும் நாவல் இது. எளிய மொழியில் துயரத்தை நாவலாசிரியர் இதில் சொல்லியிருக்கிறார்.