menu Home
Spirituality

ராமேசுவரம் கோயிலில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை வருவாய் | Rameswaram Temple’s Cash Offering Revenue is Rs.1 Crore 16 Lakh

Bhakti Teacher | June 25, 2025


ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வருவாய் கிடைத்துள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் செல்லத்துரை தலைமை வகித்தார்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி, அம்மன் மற்றும் இதர சுவாமிகள் சன்னதியிலும், உப கோயில்களின் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூபாய் ஒரு கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 19 (ரூ.1,16,57,019) ரொக்கம், 32 கிராம் தங்கம், 4 கிலோ 950 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.